பாடல் #35233
நாங்கள் ஆராதிக்கும்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
நாங்கள் ஆராதிக்கும் ஏசு நல்லவர் நன்மை செய்ய பாரில் வந்த ஏசு வல்லவர் ஏசு நல்லவர் ஏசு வல்லவர் 1. அவரது சாயலாய் எமை படைத்தவரே அவரது சுவாசம் தந்தார் அவரது மகிமையை எமக்களித்தாரே அவரைப் போல் ஒருவரில்லை 2. புவியினில் எமக்காய் வந்தவர் எம்மை புனிதராய் மாற்றிடவே திருரத்தம் சிந்தி ஜீவனை ஈந்தார் அவரைப்போல் ஒருவரில்லை 3. மரித்தவர் மீண்டும் உயிர்தெழுந்தாரே பரலோகம் ஏகினாரே, பரிசுத்த ஆவியை எமக்களித்தாரே அவரைப் போல் ஒருவரில்லை 4. மேகத்தின் மீதினில் வேகமாய் வந்தெம்மை மேலோகம் சேர்த்திடுவார் அவருடன் எம்மை நிலைத்திட செய்வார் அவரைப் போல் ஒருவரில்லை