பாடல் #35229
மனிதன் தனிமையாய்
🔤 Manidhan Thanimaiyaay
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொகையறா மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என நினைத்து மகிமையின் தேவன் ஏற்ற துணை படைத்தாரே இறைவன் இணைத்ததை மனிதன் பிரித்திடலாமோ இறுதிவரை இன்பமாய் வாழ்ந்திட வேண்டும் மணநாளின்று காண்கின்ற நீங்கள் மகிழ்வோடென்றும் வாழ்ந்திடவே மனநிறைவோடு குறைவின்றி நாளும் மன்னன் அருளோடு வாழ்ந்திடவே பரன் ஏசுவின் நாமத்தில் பரிசுத்த வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழியவே (2) 1. ஆத்ம மணாளனை ஏதேனில் மறந்த ஆதாம் ஏவாளைப் போல் வாழலாமோ ஆண்டவர் ஏசுவின் சொல்கேட்டு நீங்கள் ஆதரையில் வாழ வேண்டும் - நல்ல அன்புடனே வாழ வேண்டும் (பரன்) 2. இறைவனின் கரத்தாலே இணைகின்ற நீங்கள் இகமதில் பிரிவின்றி ஒருசேர்ந்து வாழ இனிய நல்வாழ்த்துக்கள் உரித்தாக்குகின்றோம் இன்பமுடன் வாழ வேண்டும் - நல்ல பண்புடனே வாழ வேண்டும் (பரன்) 3. ஆவலுடன் தேவன் உமைகாணும் நேரம் அத்திமரம் போல இருந்திடலாமோ ஆவியின் கனியாவும் தருகின்ற மரமாய் ஆதரையில் வாழ வேண்டும் - என்றும் ஆனந்தமாய் வாழ வேண்டும் (பரன்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thokaiyaraa Manidhan Thanimaiyaay Iruppathu Nallathalla Ena Ninaitthu Makimaiyin Devan Aertra Thunai Pataitthaarae Iraivan Inaitthathai Manidhan Piritthidalaamo Iruthivarai Inbamaay Vaazhnthida Vaentum Mananaalinru Kaankindra Neenggal Makizhvotenrum Vaazhnthidavae Mananiraivotu Kuraivinri Naalum Mannan Arulotu Vaazhnthidavae Paran Aesuvin Naamatthil Parisuttha Vaazhtthukkal Pallaantu Vaazhiyavae (2) 1. Aathma Manaalanai Aethaenil Marandha Aathaam Aevaalaip Pol Vaazhalaamo Aandavar Aesuvin Solkaettu Neenggal Aadharaiyil Vaazha Vaentum - Nalla Anpudanae Vaazha Vaentum (paran) 2. Iraivanin Karatthaalae Inaikindra Neenggal Igamathil Pirivinri Orusaernthu Vaazha Iniya Nalvaazhtthukkal Uritthaakkukinrom Inbamudan Vaazha Vaentum - Nalla Panpudanae Vaazha Vaentum (paran) 3. Aavaludan Devan Umaikaanum Naeram Atthimaram Pola Irunthidalaamo Aaviyin Kaniyaavum Tharukindra Maramaay Aadharaiyil Vaazha Vaentum - Enrum Aanandhamaay Vaazha Vaentum (paran)