பாடல் #35227
என் ஆத்ம நேசரின்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
என் ஆத்ம நேசரின் பொன்முகம் காண என் கண்கள் துடிக்குதே என் அன்பரோடு என்றென்றும் வாழ என் நெஞ்சம் தவிக்குதே சீக்கிரம் வாரும் இயேசுவே சீயோனில் என்னையும் சேர்க்கவே (2) அல்லேலூயா (4) 1. நீர் உரைத்து சென்ற வாக்குகள் நிறைவேறும் காலமிது நீதியின் சூரியனாக நீர் உதிக்கின்ற நேரமிது இருளான புவி வாழ்க்கை போதும் ஐயா இதயத்தின் வாஞ்சைகள் தீரும் ஐயா (2) 2. மண்ணுலக வாழ்வு போதுமே மன்னவா கண் பாருமே விண்ணுலகை நாடும் ஏழையின் எண்ணத்தை நிறைவேற்றுமே கண்ணீரை கரந்தொட்டு துடைப்பீர் ஐயா கஷ்டங்கள் நீக்கியே அணைப்பீர் ஐயா (2) 3. மேகத்தின் மீது ஓர் நாளிலே வேகமாய் நீர் வருவீர் மேசியா தம்திரு சாயலாய் மாற்றுவீர் என்னையுமே பரனேசு உம்மோடு பறந்திடுவேன் பரலோகில் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன் (2)