பாடல் #35226
பரலோகில் திரளான ஜனக்கூட்டமே
🔤 Paralokil Thiralaana Janakkoottamae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகில் திரளான ஜனக்கூட்டமே பரன் ஏசு ராஜனை புகழ்ந்திடுதே அல்லேலூயா, அல்லேலூயா - என்று ஆரவார தொனி கேட்குதே அல்லேலூயா இரட்சண்யமும் மகிமையும், கனமும், வல்லமையும் எங்கள் ராஜாதி ராஜனுக்கே எங்கள் கர்த்தாதி கர்த்தருக்கே 1. இருபத்து நான்கு மூப்பர்களும் இணையற்ற நான்கு ஜீவன்களும் சிங்காசனம் அதில் வீற்றிருக்கும் மங்காத பேரொளியானவரை ஆமேன் அல்லேலூயா என்று சொல்லி வீழ்ந்து வணங்கியே தொழுதனரே 2. அக்கினி ஜுவாலையைப்போல் கண்களும் அமைந்தவர் நீதியாய் நியாயந்தீர்ப்பார் ரத்தத்தில் தோய்த்த வெண் வஸ்திரத்தை அணிந்தவர் நமக்காக யுத்தம் செய்வார் அநேக கிரீடங்கள் தரித்தவர் அற்புத தேவனின் வார்த்தையாவார் 3. தேவாட்டுக் குட்டியின் கல்யாணமாம் தெய்வீக விருந்தங்கு ஆயத்தமாம் பாத்திரவான்களாய் அழைக்கப்பட்டோர் பாக்கியவான் என்ற தொனி முழங்க பரலோகில் ஓர் வெள்ளைக் குதிரையின் மேல் பரனேசு மகிமையாய் வீற்றிருப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralokil Thiralaana Janakkoottamae Paran Aesu Raajanai Pugazhnthituthae Allaelooyaa, Allaelooyaa - Enru Aaravaara Thoni Kaetkuthae Allaelooyaa Iratsanyamum Makimaiyum, Kanamum, Vallamaiyum Enggal Raajaathi Raajanukkae Enggal Kartthaathi Karttharukkae 1. Irubatthu Naanku Moopparkalum Inaiyartra Naanku Jeevankalum Singkaasanam Athil Veerrirukkum Mangkaadha Paeroliyaanavarai Aamaen Allaelooyaa Enru Solli Veezhnthu Vanangkiyae Thozhudhanarae 2. Akkini Juvaalaiyaippol Kankalum Amaindhavar Neethiyaay Niyaayantheerppaar Ratthatthil Thoyttha Ven Vasthiratthai Anindhavar Namakkaaga Yuttham Seyvaar Anaega Kireedanggal Tharitthavar Arpudha Devanin Vaartthaiyaavaar 3. Thaevaattuk Kuttiyin Kalyaanamaam Theyveega Virundhangku Aayatthamaam Paatthiravaankalaay Azhaikkappattor Paakkiyavaan Endra Thoni Muzhangga Paralokil Or Vellaik Kuthiraiyin Mael Paranaesu Makimaiyaay Veerriruppaar