பாடல் #35225
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
🔤 En Meetpar Uyirotirukkiraar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் என்றென்றும் ஜீவிக்கிறார் எத்தனை நிந்தைகள் வந்தாலுமே என்நெஞ்சம் சோர்ந்திடாதே அத்தனையும் ஏசு சிலுவையிலே அன்றே சுமந்து தீர்த்துவிட்டார் 1. மேகம் போன்ற எந்தன் பாவம் வேகம் தூரம் அகற்றி விட்டார் கார்மேகம் போன்ற என்பாவம் யாவும் கடலின் ஆழம் தள்ளி விட்டார் என்னிடம் நீயும் திரும்பிடுவாய் - என அன்புடன் என்னையும் மீட்டுக் கொண்டார் 2. எந்தன் பாவம் தீர்க்கப் பாரில் சொந்த ஜீவனை தந்துவிட்டார் என்சாபம் நீக்க பலியான தேவன் சென்னபடி தாம் உயிர்த்தெழுந்தார் மேகத்தில் ஏறிச் சென்றவர் மீண்டும் வேகமாய் வந்தெனை மீட்டிடுவார் 3. தோல்வி துன்பம் மாற்றி - நெஞ்சில் தோன்றி இன்பம் தந்துவிட்டார் உளையான சேற்றில் இருந்தென்னை தூக்கி கன்மலையின் மேல் நிறுத்திவிட்டார் உள்ளத்தின் இருளதை விரட்டியே - ஜீவ ஒளியதை தந்தெனை மீட்டுக் கொண்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Meetpar Uyirotirukkiraar Enakkaaga Yaavaiyum Seythu Mutippavar Enrenrum Jeevikkiraar Etthanai Ninthaigal Vanthaalumae Ennenjjam Sornthitaathae Atthanaiyum Aesu Siluvaiyilae Anrae Sumanthu Theertthuvittaar 1. Maegam Pondra Endhan Paavam Vaegam Thooram Agarri Vittaar Kaarmaegam Pondra Enpaavam Yaavum Katalin Aazham Thalli Vittaar Ennidam Neeyum Thirumpituvaay - Ena Anpudan Ennaiyum Meettuk Kontaar 2. Endhan Paavam Theerkkap Paaril Sondha Jeevanai Thanthuvittaar Ensaabam Neekka Paliyaana Devan Sennapati Thaam Uyirtthezhunthaar Maegatthil Aerich Sendravar Meentum Vaegamaay Vanthenai Meettituvaar 3. Tholvi Thunbam Maarri - Nenjsil Thonri Inbam Thanthuvittaar Ulaiyaana Saerril Irunthennai Thookki Kanmalaiyin Mael Nirutthivittaar Ullatthin Irulathai Virattiyae - Jeeva Oliyathai Thanthenai Meettuk Kontaar