பாடல் #35223
அன்பான தேவன் கொல்கதாமீதில்
🔤 Anpaana Devan Kolkathaameethil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பான தேவன் கொல்கொதாமீதில் என்பாவம் போக்கிட தொங்குகின்றார் துன்பத்தால் வாடி தேற்றுவாரின்றி தன்னந்தனியே தொங்குகின்றார் 1. வாழ்க்கையில் துன்பங்கள் போக்கிடவே வாரால் அடிக்கப்பட்டார் வாய் திறவாத ஆட்டைப்போல் சென்றார் தாய் அன்பை என்மீது வைத்ததினால் (அன்பான) 2. கல்லான என்மனம் மாறிடவே கல்வாரி மேட்டினிலே கள்ளர் நடுவில் வல்ல என் இயேசுவும் கள்ளனைப் போலவே தொங்குகின்றார் (அன்பான) 3. என் தேவனே எனனை ஏன் கைவிட்டீர் என்றே கதறுகின்றார் என் பாவந்தானோ என்னரும் இயேசுவை கண்ணீருடன் தொங்க மாற்றியதோ (அன்பான)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpaana Devan Kolkothaameethil Enpaavam Pokkida Thongkukinraar Thunbatthaal Vaati Thaerruvaarinri Thannandhaniyae Thongkukinraar 1. Vaazhkkaiyil Thunbanggal Pokkidavae Vaaraal Atikkappattaar Vaay Thiravaadha Aattaippol Senraar Thaay Anpai Enmeethu Vaitthathinaal (anpaana) 2. Kallaana Enmanam Maaridavae Kalvaari Maettinilae Kallar Natuvil Valla En Yesuvum Kallanaip Polavae Thongkukinraar (anpaana) 3. En Devanae Enanai Aen Kaivitteer Enrae Katharukinraar En Paavanthaano Ennarum Yesuvai Kanneerudan Thongga Maarriyatho (anpaana)