பாடல் #35222
கல்வாரி அன்பே கல்வாரி
🔤 Kalvaari Anpae Kalvaari
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி அன்பே கல்வாரி அன்பே கல்லான என்மனம் மாற்றிய அன்பே விலையேறப் பெற்ற நல் அன்பே என் நிலைமாற புவிமீது பலியான அன்பே 1. சிலுவையை சுமந்துகொண்டு - நீர் மலைமீது நடந்ததும் எனக்காகவோ சிறுமையை ஏற்றுக் கொண்டு - நீர் பொறுமையாய் இருந்ததும் எனக்காகவோ பாவங்கள் புரிந்தவன் நானிருக்க பரிசுத்தர் உமக்கேன் பாடுகளோ பாதகன் நான் சுகமாய் இருக்க தேவனே உமக்கேன் அவமானமோ எனை மீட்க பாரினில் வந்த அன்பே எனக்காக ஜீவனை தந்த அன்பே (கல்வாரி) 2. வாரடிகள் உமக்கேன்? - மா வேதனை சோதனை தான் உமக்கேன்? ஆணிகள் அறைந்ததும் ஏன்? - உன் அழகிய முகத்தினில் குருதியும் ஏன்? ஈட்டியால் சேவகர் குத்தியதேன்? கசந்ததோர் காடியும் கொடுத்ததும் ஏன்? அறியாமல் செய்கின்ற இவர்களையும் அப்பா நீர் மன்னிக்க வேண்டுமென்றீர் எனை மீட்க பாரினில் வந்த அன்பே எனக்காக ஜீவனை தந்த அன்பே (கல்வாரி)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Anpae Kalvaari Anpae Kallaana Enmanam Maarriya Anpae Vilaiyaerap Pertra Nal Anpae En Nilaimaara Puvimeethu Paliyaana Anpae 1. Siluvaiyai Sumanthukontu - Neer Malaimeethu Natandhathum Enakkaagavo Sirumaiyai Aerruk Kontu - Neer Porumaiyaay Irundhathum Enakkaagavo Paavanggal Purindhavan Naanirukka Parisutthar Umakkaen Paatugalo Paadhakan Naan Sugamaay Irukka Devanae Umakkaen Avamaanamo Enai Meetka Paarinil Vandha Anpae Enakkaaga Jeevanai Thandha Anpae (kalvaari) 2. Vaaratigal Umakkaen? - Maa Vaedhanai Sodhanai Thaan Umakkaen? Aanigal Araindhathum Aen? - Un Azhakiya Mugatthinil Kuruthiyum Aen? Eettiyaal Saevakar Kutthiyathaen? Kasandhathor Kaatiyum Kotutthathum Aen? Ariyaamal Seykindra Ivarkalaiyum Appaa Neer Mannikka Vaentumenreer Enai Meetka Paarinil Vandha Anpae Enakkaaga Jeevanai Thandha Anpae (kalvaari)