பாடல் #35220
நம் நாயகன் ஏசு
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
நம் நாயகன் ஏசு பாலகனாய் நானிலம் மீதினிலே நம் பாவம் நீக்கிடவே பிறந்தார் 1. பாலைவனப் பாதையைப் போன்ற பாவத்தின் வாழ்வை மாற்றினாரே பாய்ந்திடும் ஜீவ நீரூற்றை - அவர் படைத்திடவே பிறந்தார் - நம் நாயகன் 2. வெள்ளங்கள் போல் திரண்டிடும பாவ வல்லமையான பிடியினின்று உள்ளங்கள் யாவையும் மீட்டிடவே - நம் வள்ளலவர் பிறந்தார் 3. பெரும்புயலாய் எழும்பிடும் துயரை பொறுமையுடன் நாம் சகித்திடவே பெருமகன் தாழ்மை வடிவெடுத்து - இந்த தரணியிலே பிறந்தார் - நம் நாயகன்