பாடல் #35218
மன்னவன் ஏசு மண்மீதில்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
மன்னவன் ஏசு மண்மீதில் தானும் என்னையும் மீட்டிட மனுவாய் வந்தார் விண்ணவர் போற்றும் என்னருந்தேவன் கன்னியின் மகனாக கனிவாய் வந்தார் உன்னதத்தில் மா மகிமை பூமியிலே சமாதானம் மனுஷர் மீது பிரியமும் உண்டாக தூதர் சாற்றினரே 1. மன்னாதி மன்னனாம் என் தேவன் ஏசு மகிமை சாயலை தான் வெறுத்தோராய் மானிடனைப் போல எனக்காகப் பாரில் மாசற்ற மாதேவன் அன்புருவானார் 2. இம்மானுவேலவர் நம்மோடு என்றும் இம்மையில் மறுமையில் இருந்திட பூவில் ஏழ்மையின் வடிவாக பெத்லேகம் ஊரில் ஏசென்னும் நாமத்தில் அவர் பிறந்தாரே 3. ஆதியின் பாவங்கள் யாவையும் நீக்க நீதியின் சூரியன் போல் உதித்தாரே மாந்தரின் சாபங்கள் யாவையும் போக்க சாந்த சொரூபியாய் அவர் பிறந்தாரே