பாடல் #35216
மகிமையான தேவனின்று
🔤 Makimaiyaana Devaninru
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையான தேவனின்று மண்ணின் மீது பாலனாக வடிவெடுத்து வந்ததென்னவோ மனிதனான நானும் அன்று விண்ணில் வாழ வரமெனக்கு வந்ததேவன் தந்ததென்னவோ 1. இரவில் கடுங்குளிரில் நம் இறைவன் பிறந்திட புவியில் ஒரு இடமுமின்றி இதயம் கலங்கிட மரியும் அவள் துணையும் அங்கு மலைத்து நின்றிட மாட்டிடைதான் கிடைத்ததுவோ மன்னன் தவழ்ந்திட - ஆரிராரோ ஆரிராரிரோ 2. மந்தை அதை காக்கும் நல் மேய்ப்பர் யாவரும் வானில் வந்த சுடரைக் கண்ட ஞானி யாவரும் நிந்தைதனை நீக்கவந்த விந்தை பாலனை சிந்தையாவும் குளிர நின்று வாழ்த்தி வணங்கினர் - ஆரிராரோ ஆரிராரிரோ 3. தாவீதின் ஊர்தனிலே தாழ்மை கோலத்தில் தேவாதி தேவனவர் ஏழ்மை வடிவத்தில் பாவ இருள் நீக்கிடவே ஞான தீபமாய் பாரினிலே வந்துதித்தார் பாச ரூபமாய் - ஆரிராரோ ஆரிராரிரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyaana Devaninru Mannin Meethu Paalanaaga Vativetutthu Vandhathennavo Manidhanaana Naanum Anru Vinnil Vaazha Varamenakku Vandhadevan Thandhathennavo 1. Iravil Katungkuliril Nam Iraivan Piranthida Puviyil Oru Idamuminri Idhayam Kalangkida Mariyum Aval Thunaiyum Angku Malaitthu Ninrida Maattitaithaan Kitaitthathuvo Mannan Thavazhnthida - Aariraaro Aariraariro 2. Manthai Athai Kaakkum Nal Maeyppar Yaavarum Vaanil Vandha Sudaraik Kanda Njaani Yaavarum Ninthaidhanai Neekkavandha Vinthai Paalanai Sinthaiyaavum Kulira Ninru Vaazhtthi Vanangkinar - Aariraaro Aariraariro 3. Thaaveethin Oorthanilae Thaazhmai Kolatthil Thaevaathi Devanavar Aezhmai Vativatthil Paava Irul Neekkidavae Njaana Theebamaay Paarinilae Vanthuthitthaar Paasa Roobamaay - Aariraaro Aariraariro