பாடல் #35215
பெத்லேகேமில் ஓர்
🔤 Pethlaekaemil Or
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லேகேமில் ஓர் வால் நட்சத்திரம் என் தேவன் பிறந்ததை தெரிவிக்குதே மண் மீதிலே ஓர் விண் நாயகன் அன்போடு பிறந்ததை அறிவிக்குதே 1. தேவாதி தேவன் மா தாழ்மையுடன் தாவீதின் ஊர்தனில் ஏழ்மையுடன் தூயாதி தூயவர் பாசமுடன் தாரணி மீதினில் வந்துதித்தார் 2. ராஜாதி ராஜன் என் பாவம் தீர்க்க பாரினில் மாந்தரின் கோலம் ஏற்று கர்த்தாதி கர்த்தர் என் சாபம் நீக்க கனிவோடு பாலனாய் வந்துதித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlaekaemil Or Vaal Natsatthiram En Devan Pirandhathai Therivikkuthae Man Meethilae Or Vin Naayakan Anpotu Pirandhathai Arivikkuthae 1. Thaevaathi Devan Maa Thaazhmaiyudan Thaaveethin Oorthanil Aezhmaiyudan Thooyaathi Thooyavar Paasamudan Thaarani Meethinil Vanthuthitthaar 2. Raajaathi Raajan En Paavam Theerkka Paarinil Maandharin Kolam Aerru Kartthaathi Kartthar En Saabam Neekka Kanivotu Paalanaay Vanthuthitthaar