பாடல் #35213
எந்தன் தேவன் இயேசெனும்
🔤 Endhan Devan Yesenum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் தேவன் இயேசெனும் ராஜன் ஏழ்மையின் கோலம் ஏற்றவராக இந்த மண்ணுலகில் மானிடராய் பிறந்தார் 1. கன்னி மரியாளின் அன்பு மகனாக என்னருமை தேவன் மாட்டிடையில் தோன்ற உன்னதத்தில் மகிமை என்னகத்தில் புதுமை மன்னவரின் சிறுமை மண்ணுயிரின் பெருமை 2. பாவ இருள் நீக்க ஆதவனைப் போல பாதகரை மீட்க ஆதரையின் மேலே அல்லல்களும் நீங்க தன்பெலத்தால் தாங்க அன்பலையாய் பொங்க மன்னர்களும் கலங்க 3. தூதர்களும் சென்று மேய்ப்பரிடம் கூறி மேதைகளும் வந்து முன்னணையில் சேர கண்டனரே பரனை கன்னிமரி சுதனை வணங்கினரே அதனை பெற்றனரே கருணை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Devan Yesenum Raajan Aezhmaiyin Kolam Aertravaraaga Indha Mannulakil Maanidaraay Piranthaar 1. Kanni Mariyaalin Anpu Makanaaga Ennarumai Devan Maattitaiyil Thondra Unnathatthil Makimai Ennakatthil Puthumai Mannavarin Sirumai Mannuyirin Perumai 2. Paava Irul Neekka Aadhavanaip Pola Paadhakarai Meetka Aadharaiyin Maelae Allalkalum Neengga Thanpelatthaal Thaangga Anbalaiyaay Pongga Mannarkalum Kalangga 3. Thoodharkalum Senru Maeypparidam Koori Maethaigalum Vanthu Munnanaiyil Saera Kandanarae Paranai Kannimari Sudhanai Vanangkinarae Adhanai Pertranarae Karunai