பாடல் #35211
அதிசயமானவர் பிறந்தார்
🔤 Athisayamaanavar Piranthaar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயமானவர் பிறந்தார் - எங்கள் ஆலோசனை கர்த்தர் பிறந்தார் வல்லமை தேவன் நித்ய பிதா சமாதான பிரபு ஏசு பிறந்தார் 1. மாளிகையை அவர் வெறுத்தார் - சிறு மாட்டிடையை தெரிந்தெடுத்தார் மகிமையை நமக்காய் மறந்தார் - அவர் மனிதனைப் போலவே பிறந்தார் 2. வதைத்திடும் பயங்கர பாவம் - அதை விலக்கிட துறந்தார் யாவும் வார்த்தை என்றவர் நாமம் என்றும் வாழ்த்திடுவோம் அதை நாமும் 3. அன்றவர் அன்னையின் மகனாய் இந்த அவனியிலே அவதரித்தார் இன்றவர் அன்புருவாக - எந்தன் இதயத்திலே அவதரித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayamaanavar Piranthaar - Enggal Aalosanai Kartthar Piranthaar Vallamai Devan Nithya Pithaa Samaathaana Pirapu Aesu Piranthaar 1. Maalikaiyai Avar Verutthaar - Siru Maattitaiyai Therinthetutthaar Makimaiyai Namakkaay Maranthaar - Avar Manidhanaip Polavae Piranthaar 2. Vathaitthitum Payanggara Paavam - Athai Vilakkida Thuranthaar Yaavum Vaartthai Endravar Naamam Enrum Vaazhtthituvom Athai Naamum 3. Andravar Annaiyin Makanaay Indha Avaniyilae Avatharitthaar Indravar Anpuruvaaga - Endhan Idhayatthilae Avatharitthaar