பாடல் #35209
பெலவீன நேரத்திலே
🔤 Pelaveena Naeratthilae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலவீன நேரத்திலே பெலன் தாரும் என் தெய்வமே உம்கிருபை பொழியுமய்யா உலகினில் எனக்கது போதுமய்யா 1. சிற்றின்ப சேற்றினில் சில வேளையில் சிக்குண்டு சோர்ந்திட நேர்ந்திடுதே உமதாவி வல்லமை மறைந்திடுதே ஒரு விசை மாத்திரம் இரங்குமய்யா - இந்த 2. நிர்பந்த மானவன் நான் தானய்யா நிலையின்றி தடுமாறும் நிலை ஏனைய்யா பெலனின்றி தவித்திடும் எனைபாரய்யா பெலன் தந்து நிலைத்திட அருளுமைய்யா - உந்தன் 3. விசுவாச பாதையில் நான் செல்கையில் விரும்பாத செயல் வந்து தடை செய்யுதே திரும்பாமல் நடைபோட பெலன் இல்லையே திருக்கரத்தால் என்னை தாங்குமய்யா - உந்தன் 4. நிழல் போல பாவங்கள் தொடர்கின்றதே புயல் போல சோதனை எதிர்க்கின்றதே உமையன்றி யாரிடம் நான் செல்லுவேன் உண்மையை உம்மிடம் தான் சொல்லுவேன் - மன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelaveena Naeratthilae Pelan Thaarum En Theyvamae Umkirupai Pozhiyumayyaa Ulakinil Enakkathu Pothumayyaa 1. Sirrinba Saerrinil Sila Vaelaiyil Sikkuntu Sornthida Naernthituthae Umathaavi Vallamai Marainthituthae Oru Visai Maatthiram Irangkumayyaa - Indha 2. Nirpandha Maanavan Naan Thaanayyaa Nilaiyinri Thatumaarum Nilai Aenaiyyaa Pelaninri Thavitthitum Enaipaarayyaa Pelan Thanthu Nilaitthida Arulumaiyyaa - Undhan 3. Visuvaasa Paathaiyil Naan Selkaiyil Virumpaadha Seyal Vanthu Thatai Seyyuthae Thirumpaamal Nataipoda Pelan Illaiyae Thirukkaratthaal Ennai Thaangkumayyaa - Undhan 4. Nizhal Pola Paavanggal Thodarkindrathae Puyal Pola Sodhanai Ethirkkindrathae Umaiyanri Yaaridam Naan Selluvaen Unmaiyai Ummidam Thaan Solluvaen - Mana