பாடல் #35205
இயேசு உங்கள அழைக்கிறாரு
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
இயேசு உங்கள அழைக்கிறாரு வாங்க வாங்க - ஒங்க இதயத்தை தான் கேட்குறாரு தாங்க தாங்க இருளான பாவ வாழ்வு ஏங்க ஏங்க - ஜீவ ஒளிவீசும் அன்பு தெய்வம் ஏசுதாங்க பாவத்தையே நம்பி நீங்க ஓடாதீங்க பாழும் நரகத்துல வெந்து நீங்க வாடாதீங்க ஏசு ஒங்கள அழைக்கிறாரு... 1. இலவசமா சந்தோஷத்த கொடுப்பாருங்க - உங்க இதயத்தில சஞ்சலத்தை எடுப்பாருங்க உலகம் தரா சமாதானம் தருவாருங்க - அந்த உத்தமராம் ஏசுவையே நம்பி வாங்க 2. பாவத்துக்கு சம்பளமே மரணந்தாங்க அந்த மரணத்துக்கு முடிவு நித்திய நரகந்தாங்க அவியாத அக்கினியும் கந்தகந்தாங்க - அங்கு ஓயாம எரிஞ்சிடுமாம் நெனைச்சி பாருங்க 3. ஆண்டவரை ஏத்துக்கிட்டா இன்பந்தாங்க நாம் அன்புடனே வாழ்ந்துவிட்டா சொர்க்கந்தாங்க கால்வைக்கும் இடமெல்லாம் தங்கந்தாங்க - அங்க பஞ்சம் பசி தாகம் எதுவும் இல்லையாங்க