பாடல் #35200
இஸ்ரவேலே பயப்படாதே
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
இஸ்ரவேலே பயப்படாதே நான் உன்னை மீட்டுக்கொண்டேன் பேர்சொல்லி அழைத்தேன் நீ என்னுடையவன் - உன்னை 1. தண்ணீரை நீ கடக்கும் போது உன்னுடன் நான் இருப்பேன் - துன்ப ஆறுகளை நீ கடக்கும் போது ஆதரவாய் இருப்பேன் அக்கினியில் நீ நடக்கும் போது வேகாதிருக்கவே அற்புதமாக தப்பிவித்துன்னை அன்புடன் காத்திடுவேன் 2. நானே கர்த்தர் உன்னையும் மீட்கும் ரட்சகராயிருப்பேன் - என்றும் நானே தேவன் உன்னையும் காக்கும் ராஜாவாயிருப்பேன் நானே உந்தன் முன்னே நடந்து யுத்தத்தை செய்திடுவேன் நானிலம் மீதில் என்றென்றும் உனக்கு ஜெயத்தை ஈந்திடுவேன் 3. முந்தின காரியம் யாவையும் நீ இனி சிந்திக்க தேவையில்லை - அந்த பூர்வமானவைகள் ஒன்றையும் நீ இனி எண்ணிடத் தேவையில்லை நானே உந்தன் வாழ்க்கையில் புதிய காரியம் செய்திடுவேன் நம்பிக்கையோடு காத்திருப்பாய் - அது இப்பொழுதே தோன்றும்