பாடல் #35197
உணர்வென்ற ராகத்தில்
🔤 Unarvendra Raagatthil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உணர்வென்ற ராகத்தில் நினைவென்ற பாட்டிசைத்து துன்பத்தின் மேடையில் நான் பாடுகிறேன் துணையின்றி வேதனையில் வாடுகிறேன் 1. விரும்புவதை நான் செய்வதில்லை - மனம் விரும்பாதவற்றை செய்கின்றேன் காரணம் அதற்கு நானல்ல - என் பாவத்தை தவிர வேறல்ல திருந்திட ஓர்வழி காட்டுமய்யா நிரந்தர ஆவியை ஊற்றுமய்யா 2. துர்க்குணத்தில் நான் உருவானேன் - தாய் வயிற்றில் பாவத்தால் கருவானேன் பாவங்கள் சூழ்ந்திட காணுகின்றேன் சாபங்கள் நீங்கிட வேண்டுகின்றேன் இரக்கத்தினால் எனை தேற்றுமய்யா - உம் இரத்தத்தினால் எனை கழுவுமய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unarvendra Raagatthil Ninaivendra Paattisaitthu Thunbatthin Maetaiyil Naan Paatukiraen Thunaiyinri Vaedhanaiyil Vaatukiraen 1. Virumpuvathai Naan Seyvathillai - Manam Virumpaadhavarrai Seykinraen Kaaranam Adharku Naanalla - En Paavatthai Thavira Vaeralla Thirunthida Orvazhi Kaattumayyaa Nirandhara Aaviyai Oorrumayyaa 2. Thurkkunatthil Naan Uruvaanaen - Thaay Vayirril Paavatthaal Karuvaanaen Paavanggal Soozhnthida Kaanukinraen Saabanggal Neengkida Vaentukinraen Irakkatthinaal Enai Thaerrumayyaa - Um Ratthatthinaal Enai Kazhuvumayyaa