பாடல் #35196
நான் வணங்கும் தெய்வம்
🔤 Naan Vanangkum Theyvam
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் வணங்கும் தெய்வம் ஏசுவையே நானில மீதினில் போற்றி பாடுவேன் 1. குருடர்கள் பார்வை அடையச் செய்தார் - பூவில் செவிடர்கள் கேட்டிட வரமளித்தார் ஊமையர் பேசிட அற்புதம் செய்தார் உண்மையாய் வல்லமை தேவன் அவரே 2. வேதனை நேரத்தில் தேற்றிடுவார் - பல சோதனை சூழ்கையில் மீட்டிடுவார் ஆபத்துக் காலத்தில் ஆறுதல் அளிப்பார் ஆதரவான நல் தேவன் அவரே 3. பாரினில் தேவன் அவதரித்தார் - எந்தன் பாவங்கள் நீக்கிட அவர் மரித்தார் மூன்றாம் நாளில் அவர் உயிருடன் எழுந்தார் மீண்டும் மேகத்தில் வருவார் அவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vanangkum Theyvam Aesuvaiyae Naanila Meethinil Porri Paatuvaen 1. Kurudarkal Paarvai Ataiyach Seythaar - Poovil Sevidarkal Kaettida Varamalitthaar Oomaiyar Paesida Arpudham Seythaar Unmaiyaay Vallamai Devan Avarae 2. Vaedhanai Naeratthil Thaerrituvaar - Pala Sodhanai Soozhkaiyil Meettituvaar Aabatthuk Kaalatthil Aarudhal Alippaar Aadharavaana Nal Devan Avarae 3. Paarinil Devan Avatharitthaar - Endhan Paavanggal Neekkida Avar Maritthaar Moonraam Naalil Avar Uyirudan Ezhunthaar Meentum Maegatthil Varuvaar Avarae