பாடல் #35190
அல்லல்படும் எங்களை
🔤 Allalpatum Enggalai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லல்படும் எங்களை எல்லாம் மாத்திட்டாருங்க - ஏசு அல்லேலூயா கூட்டத்திலே சேத்துட்டாருங்க பாவம் சாபம் எல்லாத்தையும் நீக்கிட்டாருங்க - எங்கள பரலோகத்தின் பிள்ளைகளாக ஆக்கிட்டாருங்க அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - ஆமென் 1. பாவம் என்னும் படுகுழியில் பாதாளத்திலே கெடந்தோம் - கெட்ட சாத்தானோடு சேர்ந்துகிட்டு சேத்தினிலே பொரண்டோம் நேசத்தோடு ஏசுராஜா எங்களை நோக்கினாரு - அவர் பாசத்தோடு ரத்தத்தாலே எங்களை கழுவினாரு (பாவம்) 2. சிகரெட் பீடி சாராயமும் எல்லாம் ஒழிஞ்சி போச்சி - கெட்ட சினிமா வெத்தல பொயல பொடியும் எங்கோ பறந்துபோச்சு வேதம் பாட்டு ஜெபமும் எங்க பழக்கமாகிப்போச்சு - ஏசு தேவனுடைய ஊழியந்தான் எங்க ஜீவனாச்சி (பாவம்) 3. கோபம் சண்டை பெருமை யாவும் குழியில் புதைஞ்சிபோச்சி கெட்ட பொறாமையும் ஆனவமும் பெருவெள்ளத்திலே போச்சி அன்பு தயவு சாந்தம் பொறுமை சமாதானமாச்சி இச்சை அடக்கம் நற்குணம் விசுவாசமும் சந்தோஷமாச்சி (பாவம்) 4. ஆலயத்துக்கும் ஆராதனைக்கும் மட்டம் போடமாட்டோம் - சும்மா சாக்கு போக்கு சொல்லி நாங்கள் தட்டி கழிக்க மாட்டோம் தாராளமாய் கடவுளுக்கு காணிக்கையை கொடுப்போம் - ஜீவ தேவனுடைய பிள்ளை என்ற பேர நாங்க எடுப்போம் (பாவம்) 5. ஜலத்தினாலே ஆவியினாலே ஞானஸ்நானம் பெற்றோம் எங்க ஜென்ம கரும பாவம் நீங்கி மறுபடியும் பொறந்தோம் பழய இச்சை பாவங்கள சிலுவையிலே அறைஞ்சோம் - இப்ப புதிய மனுஷராக நாங்கள் ஏசுவோடு எழுந்தோம் (பாவம்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allalpatum Enggalai Ellaam Maatthittaarungga - Aesu Allaelooyaa Koottatthilae Saetthuttaarungga Paavam Saabam Ellaatthaiyum Neekkittaarungga - Enggala Paralogatthin Pillaigalaaga Aakkittaarungga Allaelooyaa Allaelooyaa Allaelooyaa - Aamen 1. Paavam Ennum Patukuzhiyil Paathaalatthilae Kedanthom - Ketta Saatthaanotu Saernthukittu Saetthinilae Porantom Naesatthotu Aesuraajaa Enggalai Nokkinaaru - Avar Paasatthotu Ratthatthaalae Enggalai Kazhuvinaaru (paavam) 2. Sigaret Peeti Saaraayamum Ellaam Ozhinjsi Pochsi - Ketta Sinimaa Vetthala Poyala Potiyum Engko Paranthupochsu Vaedham Paattu Jebamum Engga Pazhakkamaakippochsu - Aesu Devanutaiya Oozhiyanthaan Engga Jeevanaachsi (paavam) 3. Kobam Santai Perumai Yaavum Kuzhiyil Puthainjsipochsi Ketta Poraamaiyum Aanavamum Peruvellatthilae Pochsi Anpu Thayavu Saandham Porumai Samaathaanamaachsi Ichsai Adakkam Narkunam Visuvaasamum Santhoshamaachsi (paavam) 4. Aalayatthukkum Aaraadhanaikkum Mattam Podamaattom - Summaa Saakku Pokku Solli Naanggal Thatti Kazhikka Maattom Thaaraalamaay Katavulukku Kaanikkaiyai Kotuppom - Jeeva Devanutaiya Pillai Endra Paera Naangga Etuppom (paavam) 5. Jalatthinaalae Aaviyinaalae Njaanasnaanam Perrom Engga Jenma Karuma Paavam Neengki Marubatiyum Poranthom Pazhaya Ichsai Paavanggala Siluvaiyilae Arainjsom - Ippa Puthiya Manusharaaga Naanggal Aesuvotu Ezhunthom (paavam)