பாடல் #35184
மனம்போன பாதையில்
🔤 Manampona Paathaiyil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனம்போன பாதையில் நான் நடந்தேன் - என் மன்னவன் அன்பினை நான் மறந்தேன் என்னருந் தேவனை நான் பிரிந்தேன் கண்ணீரைத் தான் பரிசாய் அடைந்தேன் 1. உலகம் தரா சமாதானத்தை எந்தன் உள்ளத்தில் இயேசு அன்புடன் ஈந்தார் உலகத்தின் ஆசையை நாடியதாலே உள்ளதை இழந்தேன் நல்லதை மறந்தேன் உண்மையின் ஜீவியம் தானதை துறந்தேன் (மனம்போன) 2. கானல் நீரை நம்பியதாலே கன்மலை தேனை நான் இழந்தேனே ஜீவத்தண்ணீரை இயேசெனக்கீந்தார் உள்ளதை இழந்தேன் நல்லதை மறந்தேன் உண்மையின் ஜீவியம் தானதை துறந்தேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manampona Paathaiyil Naan Natanthaen - En Mannavan Anpinai Naan Maranthaen Ennarun Devanai Naan Pirinthaen Kanneeraith Thaan Parisaay Atainthaen 1. Ulakam Tharaa Samaathaanatthai Endhan Ullatthil Yesu Anpudan Eenthaar Ulakatthin Aasaiyai Naatiyathaalae Ullathai Izhanthaen Nallathai Maranthaen Unmaiyin Jeeviyam Thaanathai Thuranthaen (manampona) 2. Kaanal Neerai Nampiyathaalae Kanmalai Thaenai Naan Izhanthaenae Jeevatthanneerai Yesenakkeenthaar Ullathai Izhanthaen Nallathai Maranthaen Unmaiyin Jeeviyam Thaanathai Thuranthaen