பாடல் #35182
என்ஆத்தும நேசரை நான்
🔤 Enaatthuma Naesarai Naan
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொகையறா என்ஆத்தும நேசரை நான் எங்கெல்லாம் தேடுவதோ என்னெதிரில் கண்டவரை வழிநெடுக கேட்டுவிட்டேன் நெருப்பாக கொதிக்கும் எந்தன் நெஞ்சத்தைக் குளிரச் செய்ய - என்று வருவாரோ தெரியவில்லை வேதனையில் ஆழ்ந்துவிட்டேன் என் ஆத்ம நேசரை நான் தேடினேன் எங்கேயும் காணாமல் நான் வாடினேன் எவரேனும் பார்த்ததுண்டோ எனக்கின்று சொல்லுங்கள் அவரின்றி வாடும் என்னை அன்போடு தேற்றுங்கள் 1. வான வீதியிலே உலாவும் மேகக் கூட்டங்களே - எந்தன் ஞான சிருஷ்டிகரை கண்டீரோ வேகம் கூறுங்களேன் சற்று முன்பு வாசற்கதவை தட்டிச் சென்றவர் - நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை விட்டுச் சென்றவர் (என் ஆத்ம) 2. நதியின் ஓரம் தங்கும் புறா போல் கண்கள் அமைந்திருக்கும் - வாசம் அதிகம் வீசும் புஷ்பம் போல கன்னம் மலர்ந்திருக்கும் தங்கமயம் தலையில் இருக்கும் அங்கம் யானைத்தந்தம் போல அமைந்த நேசர் காணவில்லை அறிந்த யாரும் சொல்லுங்கள் 3. தேவ புகழினையே பாடும் பறவைக் கூட்டங்களே - எந்தன் பாவம் தீர்த்தவரைக் கண்டீரோ பதிலைக் கூறுங்களேன் படர்ந்து காணும் கொடியே நீ சொல் பாரில் வீசும் காற்றே நீ சொல் வளர்ந்து நிற்கும் மரமே நீ சொல் சிவந்த எந்தன் நேசர் எங்கே?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thokaiyaraa Enaatthuma Naesarai Naan Engkellaam Thaetuvatho Ennethiril Kandavarai Vazhinetuga Kaettuvittaen Neruppaaga Kothikkum Endhan Nenjjatthaik Kulirach Seyya - Enru Varuvaaro Theriyavillai Vaedhanaiyil Aazhnthuvittaen En Aathma Naesarai Naan Thaetinaen Engkaeyum Kaanaamal Naan Vaatinaen Evaraenum Paartthathunto Enakkinru Sollunggal Avarinri Vaatum Ennai Anpotu Thaerrunggal 1. Vaana Veethiyilae Ulaavum Maegak Koottanggalae - Endhan Njaana Sirushtigarai Kanteero Vaegam Koorunggalaen Sarru Munpu Vaasarkathavai Thattich Sendravar - Naan Sarrum Ethirpaarkkavillai Vittuch Sendravar (en Aathma) 2. Nathiyin Oram Thangkum Puraa Pol Kankal Amainthirukkum - Vaasam Athigam Veesum Pushpam Pola Kannam Malarnthirukkum Thanggamayam Thalaiyil Irukkum Anggam Yaanaitthandham Pola Amaindha Naesar Kaanavillai Arindha Yaarum Sollunggal 3. Thaeva Pugazhinaiyae Paatum Paravaik Koottanggalae - Endhan Paavam Theertthavaraik Kanteero Pathilaik Koorunggalaen Patarnthu Kaanum Kotiyae Nee Sol Paaril Veesum Kaarrae Nee Sol Valarnthu Nirkum Maramae Nee Sol Sivandha Endhan Naesar Engkae?