பாடல் #35181
நான் பாடவந்தேன்
🔤 Naan Paadavanthaen
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பாடவந்தேன் என் நெஞ்சை தந்தேன் என் தேவன் ஏசு என் சொந்தம் என்றேன் என் நாவில் இன்று புதுப்பாடல் தந்தார் என் வாழ்வில் இன்று புதுப்பாதை கண்டேன் 1. பாவம் எனும் சேற்றில் நான் வாழ்ந்தபோது தேவன் எனை மீட்டு ஆறுதலை ஈந்தார் கல்லான எந்தன் இதயத்தை மாற்றி கனிவோடு என்னை கரைசேர்க்கும் தேவன் (என் நாவில்) 2. சோதனைகள் துன்பம் சூழ்கின்றபோது சோர்ந்துவிடும் என்னை சேர்த்தணைத்து தேற்றி கலங்காதே என்று கரம்பற்றி நின்று கருத்தோடு என்னை நடத்திடும் தேவன் (என் நாவில்) 3. ஜீவனுள்ள நாளும்தேவன்பை நானும் ஆவியுடன் நாடி ஆதரையில் வாழ்வேன் சந்தோஷம் பொங்க சஞ்சலமும் நீங்க சமாதானம் தந்து வழிகாட்டும் தேவன் (என் நாவில்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Paadavanthaen En Nenjsai Thanthaen En Devan Aesu En Sondham Enraen En Naavil Inru Puthuppaadal Thanthaar En Vaazhvil Inru Puthuppaathai Kantaen 1. Paavam Enum Saerril Naan Vaazhndhapothu Devan Enai Meettu Aarudhalai Eenthaar Kallaana Endhan Idhayatthai Maarri Kanivotu Ennai Karaisaerkkum Devan (en Naavil) 2. Sodhanaigal Thunbam Soozhkindrapothu Sornthuvitum Ennai Saertthanaitthu Thaerri Kalangkaathae Enru Karambarri Ninru Karutthotu Ennai Natatthitum Devan (en Naavil) 3. Jeevanulla Naalumdevanpai Naanum Aaviyudan Naati Aadharaiyil Vaazhvaen Santhosham Pongga Sanjjalamum Neengga Samaathaanam Thanthu Vazhikaattum Devan (en Naavil)