பாடல் #35180
உலக இன்பம் வேண்டாம்
🔤 Ulaka Inbam Vaentaam
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலக இன்பம் வேண்டாம் - எங்கள் உன்னதர் இயேசுவே போதும் நிலையில்லாத வாழ்வே வேண்டாம் நித்தமும் இயேசுவே போதும் உலகில் காணும் யாவும் ஒருநாள் அழியும் உள்ளம் காணும் இன்பம் யாவும் அழியும் 1. பிறக்கும்போது எவனும் எதையும் கொண்டுவருவதில்லை - உயிர் பிரியும்போது எவனும் எதையும் கொண்டுசெல்வதில்லை புல்லின் பூவைப்போல நம் வாழ்வு நிலையற்றதென எண்ணி - அவர் பாதம் தொழுவோம் நாளுமே 2. உலகை நியாயம் தீர்க்க தேவன் வருகின்ற நாளிலே - எந்த உறவும் பணமும் புகழும் எதுவும் துணையாய் நிற்பதில்லை பரலோகில் இன்பம் காண புவிமீதில் நாம் வாழும் இந்நாளில் பரனேசு பாதம் நாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulaka Inbam Vaentaam - Enggal Unnathar Yesuvae Pothum Nilaiyillaadha Vaazhvae Vaentaam Nitthamum Yesuvae Pothum Ulakil Kaanum Yaavum Orunaal Azhiyum Ullam Kaanum Inbam Yaavum Azhiyum 1. Pirakkumpothu Evanum Ethaiyum Kontuvaruvathillai - Uyir Piriyumpothu Evanum Ethaiyum Kontuselvathillai Pullin Poovaippola Nam Vaazhvu Nilaiyartrathena Enni - Avar Paadham Thozhuvom Naalumae 2. Ulakai Niyaayam Theerkka Devan Varukindra Naalilae - Endha Uravum Panamum Pugazhum Ethuvum Thunaiyaay Nirpathillai Paralokil Inbam Kaana Puvimeethil Naam Vaazhum Innaalil Paranaesu Paadham Naatuvom