பாடல் #35173
வார்த்தையினால் உலகை
🔤 Vaartthaiyinaal Ulakai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வார்த்தையினால் உலகை படைத்தவர் தேவன் வார்த்தை என்பது தான் அவர் நாமம் ஆகும் கிருபையினாலும் சத்தியத்தாலும் நிறைந்தவராய் நம்மில் வாசம் செய்யும் வார்த்தை 2. ஆதியிலே இருந்த அற்புத வார்த்தை நீதியின் தேவனுடன் இருந்த தேவ வார்த்தை ஜோதியின் தேவனாக இருந்த நல் வார்த்தை ஆதரை மீதில் வந்த அதிசய வார்த்தை 3. சீஷர்கள் முகமுகமாய் தரிசித்த வார்த்தை பக்தர்கள் பரவசமாய் போற்றும் ஜீவ வார்த்தை தூதர்கள் யுகயுகமாய் வாழ்ந்திடும் வார்த்தை யூதரின் ராஜசிங்கம் சத்திய வார்த்தை 4. காற்றையும் கடலதையும் அதட்டிய வார்த்தை கடலின்மேல் நடந்து காட்சி தந்த வார்த்தை கேடுள்ள மாந்தர்களை மாற்றிடும் வார்த்தை பாடுள்ள மனிதரையும் தேற்றிடும் வார்த்தை 5. லாசருவை உயிருடன் எழுப்பிய வார்த்தை சத்துருவை விரட்டும் சக்தியுள்ள வார்த்தை குருடர்கள் செவிடர்கட்கும் சுகம் தந்த வார்த்தை கருணையின் வடிவமாக உலவின வார்த்தை 6. கழுதையின் மேல் பவனி வந்த மெய்வார்த்தை அழுகையின் கண்ணீரை துடைக்கும் வேதவார்த்தை சிலுவையிலே ஜீவன் தந்த நல்வார்த்தை விலையில்லா ரத்தமதை சிந்திய வார்த்தை 7. பாவங்கள் நீக்கிடவே பிறந்த நல்வார்த்தை பாவத்திற்காக மரித்து உயிர்தெழுந்த வார்த்தை மேகத்தின் மீது சென்ற உன்னத வார்த்தை மகிமையின் ராஜனாக வருகின்ற வார்த்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vaartthaiyinaal Ulakai Pataitthavar Devan Vaartthai Enbathu Thaan Avar Naamam Aakum Kirupaiyinaalum Satthiyatthaalum Niraindhavaraay Nammil Vaasam Seyyum Vaartthai 2. Aathiyilae Irundha Arpudha Vaartthai Neethiyin Devanudan Irundha Thaeva Vaartthai Jothiyin Devanaaga Irundha Nal Vaartthai Aadharai Meethil Vandha Athisaya Vaartthai 3. Seesharkal Mugamugamaay Tharisittha Vaartthai Paktharkal Paravasamaay Porrum Jeeva Vaartthai Thoodharkal Yugayugamaay Vaazhnthitum Vaartthai Yoodharin Raajasinggam Satthiya Vaartthai 4. Kaarraiyum Katalathaiyum Adhattiya Vaartthai Katalinmael Natanthu Kaatsi Thandha Vaartthai Kaetulla Maandharkalai Maarritum Vaartthai Paatulla Manidharaiyum Thaerritum Vaartthai 5. Laasaruvai Uyirudan Ezhuppiya Vaartthai Satthuruvai Virattum Sakthiyulla Vaartthai Kurudarkal Sevidarkatkum Sugam Thandha Vaartthai Karunaiyin Vativamaaga Ulavina Vaartthai 6. Kazhuthaiyin Mael Pavani Vandha Meyvaartthai Azhukaiyin Kanneerai Thutaikkum Vaedhavaartthai Siluvaiyilae Jeevan Thandha Nalvaartthai Vilaiyillaa Ratthamathai Sinthiya Vaartthai 7. Paavanggal Neekkidavae Pirandha Nalvaartthai Paavatthirkaaga Maritthu Uyirthezhundha Vaartthai Maegatthin Meethu Sendra Unnatha Vaartthai Makimaiyin Raajanaaga Varukindra Vaartthai