பாடல் #35170
உனக்கென ஒரு தேவன்பாரில்
🔤 Unakkena Oru Devanpaaril
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கென ஒரு தேவன்பாரில் பிறந்ததால் உனக்கொரு குறைவில்லை அவர் ஜீவன் தந்ததால் உலகினில் உருவான துன்பம் பறந்தது உளமதில் நிறைவான இன்பம் பிறந்தது இதயமே உந்தன் இறைவனை வாழ்த்திப்பாடு 1. உன்னை அழைத்தவர் உண்மையுள்ள தேவன் - அவர் உன்னோடென்றும் நிலைத்து நிற்கும் ராஜன் கண்ணின் மணிபோல - உன்னை காக்கும் அவர் என்றும்(தம்) கண்ணுறக்கம் கொள்வதுமில்லை உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கை விடுவதுமில்லை 2. பிள்ளையதனை தாய் மறக்க நேரிட்டாலும் - தம் உள்ளங்கையில் உனை வரைந்து வைத்த தேவன் உன்னை மறப்பதில்லை - இனி உனக்கோர் பயமுமில்லை வானம் பூமி யாவும் மாறும் தேவ வார்த்தை மாறுவதில்லை தீமை உனை சேருவதில்லை 3. மனிதர் மாறிடினும் மாறிடாத தேவன் - அவர் மகனாய் உன்னை ஏற்றுக்கொண்ட ராஜன் பாவம் மன்னிப்பவர் - அதை உடனே மறந்திடுவார் உன்னை மீட்க மனுவாய் பிறந்தார் உந்தனக்காய் மரித்தும் எழுந்தார் உனக்கென அவர் மீண்டும் வருவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkena Oru Devanpaaril Pirandhathaal Unakkoru Kuraivillai Avar Jeevan Thandhathaal Ulakinil Uruvaana Thunbam Parandhathu Ulamathil Niraivaana Inbam Pirandhathu Idhayamae Undhan Iraivanai Vaazhtthippaatu 1. Unnai Azhaitthavar Unmaiyulla Devan - Avar Unnotenrum Nilaitthu Nirkum Raajan Kannin Manipola - Unnai Kaakkum Avar Enrum(tham) Kannurakkam Kolvathumillai Unnai Vittu Vilakuvathumillai Unnai Kai Vituvathumillai 2. Pillaiyathanai Thaay Marakka Naerittaalum - Tham Ullangkaiyil Unai Varainthu Vaittha Devan Unnai Marappathillai - Ini Unakkor Payamumillai Vaanam Poomi Yaavum Maarum Thaeva Vaartthai Maaruvathillai Theemai Unai Saeruvathillai 3. Manidhar Maaritinum Maaritaadha Devan - Avar Makanaay Unnai Aerrukkonda Raajan Paavam Mannippavar - Athai Udanae Maranthituvaar Unnai Meetka Manuvaay Piranthaar Undhanakkaay Maritthum Ezhunthaar Unakkena Avar Meentum Varuvaar