பாடல் #35169
இஸ்ரவேலின் முன் நடந்த
🔤 Isravaelin Mun Natandha
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் முன் நடந்த தேவன் இன்றுந்தன் முன்னே செல்வதால் - நீ திகையாதே கலங்காதே திடன் கொள்ளுவாய் எந்தன் மனமே பகலின் வெய்யிலோ இரவின்குளிரோ எதுவும் உனை தாக்குவதில்லை மேகஸ்தம்பம் அக்கினிஸ்தம்பம் வெகுவாய் உனைக் காத்திடுமே 1. பார் அங்கே செங்கடலும் தரைபோலத் தெரியும் பார்வோனின் சேனைகள் கடலுக்குள் மடியும் பார்மீதில் இதுபோல யார் செய்யக்கூடும் பரன் இயேசு நாமத்தில் எல்லாமே கூடும் யுத்தம் கர்த்தருடையது ஜெயமோ உன்னுடையது 2 (இஸ்ரவேலின்) 2. இனிமேலும் எகிப்திற்கு அடிமை நீ இல்லை இன்னும் ஏன் திகைக்கிறாய் அவரே உன் எல்லை கானானில் வாழ்வதற்கு உனை தேவன் பிரித்தார் வீணாக கலங்காதே அவர் உன்னை சுமப்பார் 3. மன்னாவை உனக்காக உணவாக கொடுப்பார் கன்மலைத் தண்ணீரால் தாகத்தை தீர்ப்பார் உறங்காமல் தூங்காமல் உனை தேவன் காப்பார் உனை விட்டு விலகாமல் உன் முன்னே நடப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Mun Natandha Devan Inrundhan Munnae Selvathaal - Nee Thikaiyaathae Kalangkaathae Thidan Kolluvaay Endhan Manamae Pakalin Veyyilo Iravinkuliro Ethuvum Unai Thaakkuvathillai Maegasthambam Akkinisthambam Vekuvaay Unaik Kaatthitumae 1. Paar Angkae Senggatalum Tharaipolath Theriyum Paarvonin Saenaigal Katalukkul Matiyum Paarmeethil Ithupola Yaar Seyyakkootum Paran Yesu Naamatthil Ellaamae Kootum Yuttham Karttharutaiyathu Jeyamo Unnutaiyathu 2 (isravaelin) 2. Inimaelum Ekipthirku Atimai Nee Illai Innum Aen Thikaikkiraay Avarae Un Ellai Kaanaanil Vaazhvatharku Unai Devan Piritthaar Veenaaga Kalangkaathae Avar Unnai Sumappaar 3. Mannaavai Unakkaaga Unavaaga Kotuppaar Kanmalaith Thanneeraal Thaagatthai Theerppaar Urangkaamal Thoongkaamal Unai Devan Kaappaar Unai Vittu Vilakaamal Un Munnae Natappaar