பாடல் #35126
இயேசு ஒருவரே
🔤 Yesu Oruvarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ஒருவரே என் வாழ்வின் ஆதாரம் உம்மையன்றி யாரையண்டி பிழைக்கப் போகிறோம் நிரந்தரமில்லா உலகமிது நிச்சயமில்லா வாழ்க்கையிது 1.வறண்டுபோன நிலம் போல் நான் வாடி நின்றேன் எனை வளமாக்க வந்தீரே மழையாகவே -2 வானம் பார்த்த பூமியைப் போல நாதா உம்மை பார்க்கன்றேன் -2 2.பட்டுப்போன மரம் போல் நான் முறிந்து போனேன் எனை வேரோடு இணைத்து நீர் உயிர்ப்பித்தீரே-2 செடி மேல் படரும் கொடியைப் போல நாதா உம்மை சார்ந்திருப்பேன் -2 3.தாயையிழந்த சேயைப்போல் தனியாய் நின்றேன் எனை தேடி வந்து மார்போடு அணைத்திட்டீரே -2 தாயின் மடியில் சேயைப் போல நாதா உம்மில் மகிழ்ந்திருப்பேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Oruvarae En Vaazhvin Aathaaram Ummaiyanri Yaaraiyanti Pizhaikkap Pokirom Nirandharamillaa Ulakamithu Nicchayamillaa Vaazhkkaiyithu 1.varantupona Nilam Pol Naan Vaati Ninraen Enai Valamaakka Vantheerae Mazhaiyaagavae -2 Vaanam Paarttha Poomiyaip Pola Naathaa Ummai Paarkkanraen -2 2.pattuppona Maram Pol Naan Murinthu Ponaen Enai Vaerotu Inaitthu Neer Uyirppittheerae-2 Seti Mael Patarum Kotiyaip Pola Naathaa Ummai Saarnthiruppaen -2 3.thaayaiyizhandha Saeyaippol Thaniyaay Ninraen Enai Thaeti Vanthu Maarpotu Anaitthitteerae -2 Thaayin Matiyil Saeyaip Pola Naathaa Ummil Makizhnthiruppaen -2