பாடல் #35106
உம் கிருபை போதும்
🔤 Um Kirupai Pothum
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கிருபை போதும் ஆண்டாண்டு காலம் உம் பார்வை போதும் நான் வாழும் நாளும் துன்ப கடலையும் நீந்துவேன் உந்தன் அன்பினிலே மூழ்குவேன் உம் பாதம் வாழ்ந்து சுகித்திருப்பேன் - 2 உம் கிருபை வந்ததால் புது வாழ்வு மலர்ந்தது உம் அன்பை கண்டதால் புதுபாடல் பிறந்தது என் நாவில் எழும் துதியில் நீர் வாசமோ? மா பாவி என் மீது ஏன் பாசமோ? பாதை தெரியாததால் வாழ்வில் தடுமாறினேன் நீர் சுமந்த குருசதால் புது ஜீவன் கண்டடைந்தேன் விண்ணான ராஜன் நீர் என்னை தேடினீர் மண்ணான என்னை மணவாட்டியாக்கினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Kirupai Pothum Aantaantu Kaalam Um Paarvai Pothum Naan Vaazhum Naalum Thunba Katalaiyum Neenthuvaen Undhan Anpinilae Moozhkuvaen Um Paadham Vaazhnthu Sukitthiruppaen - 2 Um Kirupai Vandhathaal Puthu Vaazhvu Malarndhathu Um Anpai Kandathaal Puthupaadal Pirandhathu En Naavil Ezhum Thuthiyil Neer Vaasamo? Maa Paavi En Meethu Aen Paasamo? Paathai Theriyaadhathaal Vaazhvil Thatumaarinaen Neer Sumandha Kurusathaal Puthu Jeevan Kandatainthaen Vinnaana Raajan Neer Ennai Thaetineer Mannaana Ennai Manavaattiyaakkineer