பாடல் #35101
ஒரு போதும் மறவாத
🔤 Oru Pothum Maravaadha
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு போதும் மறவாத நேசர் இயேசு உண்டு ஆறாத மனப்புண்கள் ஆற்றுவார் இதை நம்பு அனுதினம் அழுது கண்ணீரால் உன் தலையணை நனைகிறதே நீ தேடும் உறவுகள் உதவாமல் ஒதுங்கி நின்றனரோ - இயேசு கண்ணீரை துடைத்திடுவார் - தம் கரங்களால் தாங்கிடுவார் கானல் நீர் தான் வாழ்வு அதை கனவிலும் மதியாதே மரணம் வாழ்வின் முடிவு அதை மாற்றிட இயலாதே - இயேசு புது வாழ்வு தந்திடுவார் - நம்மை பரலோகில் சேர்த்திடுவார் கோர சிலுவை எடுத்தார் நம் சாபத்தை மாற்றிடவே குருதி சிந்தி மரித்தார் நம் மரணத்தை வென்றிடவே நோக்கி பார்த்து பிழைத்திடுவோம் - அவர் நாமத்தில் ஜெயம் பெறுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Pothum Maravaadha Naesar Yesu Untu Aaraadha Manappunkal Aarruvaar Ithai Nampu Anuthinam Azhuthu Kanneeraal Un Thalaiyanai Nanaikirathae Nee Thaetum Uravugal Udhavaamal Othungki Nindranaro - Yesu Kanneerai Thutaitthituvaar - Tham Karanggalaal Thaangkituvaar Kaanal Neer Thaan Vaazhvu Athai Kanavilum Mathiyaathae Maranam Vaazhvin Mutivu Athai Maarrida Iyalaathae - Yesu Puthu Vaazhvu Thanthituvaar - Nammai Paralokil Saertthituvaar Kora Siluvai Etutthaar Nam Saabatthai Maarridavae Kuruthi Sinthi Maritthaar Nam Maranatthai Venridavae Nokki Paartthu Pizhaitthituvom - Avar Naamatthil Jeyam Peruvom