பாடல் #35060
வானங்களும் கொள்ளாத
🔤 Vaananggalum Kollaadha
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானங்களும் கொள்ளாத மா தேவனே - உம்மை நான் போற்றுவேன் வாயார வாழ்த்துவேன் வாழ்வெல்லாம் உம் பாதம் காத்திருப்பேன் (2) 1. பாவி என்னை தேடி வந்த - விந்தை அன்பை என்ன சொல்லுவேன் கண்ணைப் போல ஏந்திக் கொண்ட உம்மை விட்டு எங்கு செல்லுவேன் பாதம் ஒன்று போதும் என் தேவனே வாழ்வெல்லாம் உம் பாதம் காத்திருப்பேன் 2. பேதை என்னை ஞானியாக்க பரிசுத்த வேதம் தந்தீரே வாதை என்னை அணுகாமல் ஜீவ பாதை நடத்தினீரே 3. பெலவீனன் என்னைத் தேற்ற பெலமுள்ள ஆவி தந்தீரே ஒன்றுமற்ற என்னைக் காக்க தூதர் காவல் நாளும் தந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaananggalum Kollaadha Maa Devanae - Ummai Naan Porruvaen Vaayaara Vaazhtthuvaen Vaazhvellaam Um Paadham Kaatthiruppaen (2) 1. Paavi Ennai Thaeti Vandha - Vinthai Anpai Enna Solluvaen Kannaip Pola Aenthik Konda Ummai Vittu Engku Selluvaen Paadham Onru Pothum En Devanae Vaazhvellaam Um Paadham Kaatthiruppaen 2. Paethai Ennai Njaaniyaakka Parisuttha Vaedham Thantheerae Vaathai Ennai Anukaamal Jeeva Paathai Natatthineerae 3. Pelaveenan Ennaith Thaertra Pelamulla Aavi Thantheerae Onrumartra Ennaik Kaakka Thoodhar Kaaval Naalum Thantheerae