பாடல் #35057
துன்பம் தொடர்கதை
🔤 Thunbam Thodarkathai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துன்பம் தொடர்கதை போலவே வந்தாலும் உள்ளத்தில் நீ சோதே - அன்பர் இயேசு உன்னை மறந்தார் என எண்ணி உன் மனம் போல் நடவாதே எண்ணிப்பார் நீ பெற்ற நன்மைகளை கண்ணைப் போல் காத்திட்ட கிருபைகளை துன்ப புயலில் சிக்கிக் கொண்ட வேளை தூக்கி எடுத்தது யாரோ கண்ணீர் கடலில் நீ அழும் வேளை கருத்துடன் காத்தது யாரோ ஆற்றுவார் இல்லை தேற்றுவார் இல்லை அருகில் வந்தது யாரோ - உன் அருகில் வந்தது யாரோ தனிமை தவிப்பு நீ அழும் வேளை துணையாய் வந்தது யாரோ வியாதி படுக்கையில் நீ அழும் வேளை வைத்தியரானது யாரோ சொந்தமில்லை பந்தமில்லை சொந்தமானது யாரோ - உன் சொந்தமானது யாரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunbam Thodarkathai Polavae Vanthaalum Ullatthil Nee Sothae - Anbar Yesu Unnai Maranthaar Ena Enni Un Manam Pol Natavaathae Ennippaar Nee Pertra Nanmaigalai Kannaip Pol Kaatthitta Kirupaigalai Thunba Puyalil Sikkik Konda Vaelai Thookki Etutthathu Yaaro Kanneer Katalil Nee Azhum Vaelai Karutthudan Kaatthathu Yaaro Aarruvaar Illai Thaerruvaar Illai Arukil Vandhathu Yaaro - Un Arukil Vandhathu Yaaro Thanimai Thavippu Nee Azhum Vaelai Thunaiyaay Vandhathu Yaaro Viyaathi Patukkaiyil Nee Azhum Vaelai Vaitthiyaraanathu Yaaro Sondhamillai Pandhamillai Sondhamaanathu Yaaro - Un Sondhamaanathu Yaaro