பாடல் #35053
புரியாத பாதையில் தினம்
🔤 Puriyaadha Paathaiyil Thinam
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புரியாத பாதையில் தினம் ஏகினேன் மலை போன்ற பாவத்தில் நாளும் மூழ்கினேன் விளங்காத வாழ்விலே தடுமாறினேன் - நான் சிலுவையை பார்க்கையிலே குணமாகினேன் - நான் தடுமாறும் நெஞ்சங்களே... இயேசுவை பாருங்களே அழைத்திடும் நேசரண்டை... குறைகளை கூறுங்களே தம்மிடம் வருபவரை... தள்ளாத நேசரவர் தாமதம் பண்ணாமல் தயை செய்யும் நாதனவர் பாவம் என்ற சேற்றினிலே சாபம் என்ற ஆற்றினிலே மூழ்கிடும் வேளையிலே இயேசுவை நோக்குங்களே பரிகாரியாம் இயேசு பரிந்து நின்றே பாதகன் போல் நமக்காய் மரிந்தாரே அவர் சிந்தும் ரத்தத்தால் அவர் தந்த வேதத்தால் பரிசுத்தமாக்கிடுவார்... சுத்தாவி ஈந்திடுவார் இரட்சண்ய நாளிதுவே தாமதம் பண்ணாதே அனுக்கிரக வேளையிதே காலமினி செல்லாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puriyaadha Paathaiyil Thinam Aekinaen Malai Pondra Paavatthil Naalum Moozhkinaen Vilangkaadha Vaazhvilae Thatumaarinaen - Naan Siluvaiyai Paarkkaiyilae Kunamaakinaen - Naan Thatumaarum Nenjjanggalae... Yesuvai Paarunggalae Azhaitthitum Naesarantai... Kuraigalai Koorunggalae Thammidam Varubavarai... Thallaadha Naesaravar Thaamatham Pannaamal Thayai Seyyum Naadhanavar Paavam Endra Saerrinilae Saabam Endra Aarrinilae Moozhkitum Vaelaiyilae Yesuvai Nokkunggalae Parikaariyaam Yesu Parinthu Ninrae Paadhakan Pol Namakkaay Marinthaarae Avar Sinthum Ratthatthaal Avar Thandha Vaedhatthaal Parisutthamaakkituvaar... Sutthaavi Eenthituvaar Iratsanya Naalithuvae Thaamatham Pannaathae Anukkiraka Vaelaiyithae Kaalamini Sellaathae