பாடல் #35029
எம்மைத் தேடி பூவில்
🔤 Emmaith Thaeti Poovil
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எம்மைத் தேடி பூவில் வந்து எமக்காக ஜீவன் தந்து - வாழ்வு தந்த எங்கள் இயேசு தேவா கண்ணைப் போல பாதுகாத்து உந்தன் அன்பில் மூழ்க செய்து எம்மை இங்கு பாட செய்த நாதா தேவா... ஆ... தேவா... ஆ இதயம் தேடுகின்ற தேவா - எங்கள் துதியினில் வந்திடும் மூவா உம்மை பாடிட நாவுகள் போதா காணாத ஆட்டைப் போல வழி தப்பி திரிந்தோம் காடு மேடு தேடி ஓடி கரம் எம்மை பிடித்தீர் புல்லுள்ள இடங்களில் மேய்த்து... அமர்ந்த நீரண்டை நடத்தி நானே நல்ல மேய்ப்பன் என்று தோளினில் சுமந்தீர் கெட்டக் குமாரன் போல தூரத்தில் திரிந்தோம் பார்த்து காத்து துடித்து தவித்து தாவி வந்தணைத்தீர் விலையுள்ள ஆடைகள் தந்து மாபெரும் விருந்தொன்றை செய்து நானே உந்தன் தந்தை என்று சிந்தையில் நிறைந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Emmaith Thaeti Poovil Vanthu Emakkaaga Jeevan Thanthu - Vaazhvu Thandha Enggal Yesu Thaevaa Kannaip Pola Paathukaatthu Undhan Anpil Moozhka Seythu Emmai Ingku Paada Seytha Naathaa Thaevaa... Aa... Thaevaa... Aa Idhayam Thaetukindra Thaevaa - Enggal Thuthiyinil Vanthitum Moovaa Ummai Paatida Naavugal Pothaa Kaanaadha Aattaip Pola Vazhi Thappi Thirinthom Kaatu Maetu Thaeti Oti Karam Emmai Pitittheer Pullulla Idanggalil Maeytthu... Amarndha Neerantai Natatthi Naanae Nalla Maeyppan Enru Tholinil Sumantheer Kettak Kumaaran Pola Thooratthil Thirinthom Paartthu Kaatthu Thutitthu Thavitthu Thaavi Vandhanaittheer Vilaiyulla Aataigal Thanthu Maaperum Virunthonrai Seythu Naanae Undhan Thanthai Enru Sinthaiyil Niraintheer