பாடல் #35007
உயிர்த்தாரே உயிர்த்தாரே
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
உயிர்த்தரே உயிர்த்தரே உன்னதர் இயேசு உயிர்த்தாரே - 2 சாவினை வென்று உயிர்த்தாரே சாத்தானை ஜெயித்து உயிர்த்தாரே - 2 1. கல்லறை திறந்திட உயிர்த்தாரே காவலர் நடுங்கிட உயிர்த்தாரே - 2 நீதிமானாய் நம்மை மாற்ற நீதியின் தேவன் உயிர்த்தாரே - 2 2. மரித்த இயேசு உயிர்த்தாரே மரியாள் கண்டிட உயிர்த்தாரே - 2 அகிலமெங்கும் ஓடி சொல்ல அன்பர் இயேசு உயிர்த்தாரே - 2 3. தேவ மகிமையில் உயிர்த்தாரே தேவ சாயலில் உயிர்ப்போமே - 2 உயிர்த்த இயேசு திரும்ப வருவார் உயிரோடு என்றும் ஆளுவோம் - 2