பாடல் #3500
மகிமை நிறைந்த தேவனின்
🎙 கிறிஸ்தவ பாடல்
மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை மகிழ்ந்து களி கூர வா அவர் வருகை நெருங்கிடும் நேரமிதே-நீ மனந்திரும்பியே வா பலியினாலே உன்னைக் காக்கவந்த என் ரபியை நோக்கியே வா இரட்சிப்பைத் தந்துன்னை மீட்கும் ஜயனென் இயேசுவை நோக்கியே வா கல்லிலும் முள்ளிலும் கடவுளேது நீ கர்த்தரை நோக்கியே வா உன்னை மனிதனாகவே சிருஷ்டித்த எந்தன் தேவனைத் தேடியே வா கருணை பொழியும் அவர் அன்பை நீயும் கல்வாரியில் பார்த்திட வா எம்மைக் காத்திடும் மேய்ப்பரின் மந்தையில் நீயும் சேர்ந்து வாழ்ந்திடவே வா எங்களைக் காத்திடும் இயேசுவே உன்னையும் நேசிக்கிறார் ஓடிவா உன்னதமானவர் உயிர்த்தெழுந்தே இன்னும் ஜீவிக்கிறார் ஓடிவா இயேசு ஜீவிக்கிறார் ஓடிவா உன்னை நேசிக்கிறார் ஓடிவா