பாடல் #34992
அன்பரே அன்பின் இருப்பிடமே
🔤 Anbarae Anpin Iruppidamae
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பரே அன்பின் இருப்பிடமே இன்பமே இரக்கத்தின் ஐஸ்வர்யமே - 2 இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே - 2 1. தாயின் வயிற்றினில் உருவாகும் முன்னே கருவினை நீர் கண்டீரே - 2 சேயாய் கருவினில் நான் இருந்தபோதும் கருணையாய் என்னை கொண்டீரே - 2 2. உந்தனின் அன்பினை நான் மறந்த போதும் எந்தனை சேர்த்துக்கொண்டீர் - 2 உந்தனின் கிருபையை திரும்பவும் தந்து எந்தனை மகிழச் செய்தீர் - 2 3. எந்தனுக்காகவே தம் ஜீவன் தந்தீர் என்ன நான் செய்திடுவேன் - 2 எந்தையை உந்தனின் அன்பினை என்றும் எங்குமே பகிர்ந்திடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbarae Anpin Iruppidamae Inbamae Irakkatthin Aisvaryamae - 2 Yesuvae Yesuvae Yesuvae Yesuvae - 2 1. Thaayin Vayirrinil Uruvaakum Munnae Karuvinai Neer Kanteerae - 2 Saeyaay Karuvinil Naan Irundhapothum Karunaiyaay Ennai Konteerae - 2 2. Undhanin Anpinai Naan Marandha Pothum Endhanai Saertthukkonteer - 2 Undhanin Kirupaiyai Thirumbavum Thanthu Endhanai Makizhach Seytheer - 2 3. Endhanukkaagavae Tham Jeevan Thantheer Enna Naan Seythituvaen - 2 Enthaiyai Undhanin Anpinai Enrum Engkumae Pakirnthituvaen - 2