பாடல் #3468
போதுமானவரே
🔤 Pothumaanavarae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை எனக்காக தண்டிக்கப்பட்டீரே அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் எனக்காக காயப்பட்டீரே அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன் பாவங்கள் சுமந்ததனால் - நான் நீதிமானாய் மாற்றப்பட்டேன் மரணத்தை ஏற்றுக் கொண்டதால் - நித்திய ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா எனக்காக புறக்கணிக்கப்பட்டீர் அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன் எனக்காக அவமானமடைந்து - உம் மகிமையிலே பங்குபெறச் செய்தீர் சிலுவையிலே ஏழ்மையானதால் - என்னை செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே - நீர் சாபங்களை சுமந்து கொண்டதால் - நான் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pothumaanavarae Puthumaiyaanavarae Paathukaappavarae En Paavam Theertthavarae Aaraadhanai (2) Aayulellaam Aaraadhanai Enakkaaga Thantikkappatteerae Adhanaal Naan Mannikkappattaen Enakkaaga Kaayappatteerae Adhanaal Naan Sugam Perruk Kontaen Paavanggal Sumandhathanaal - Naan Neethimaanaay Maartrappattaen Maranatthai Aerruk Kondathaal - Nitthiya Jeevanai Perruk Kontaen Aiyaa Enakkaaga Purakkanikkappatteer Adhanaal Naan Aerruk Kollappattaen Enakkaaga Avamaanamatainthu - Um Makimaiyilae Pangkuperach Seytheer Siluvaiyilae Aezhmaiyaanathaal - Ennai Selvandhanaay Maarrivitteerae - Neer Saabanggalai Sumanthu Kondathaal - Naan Aasirvaadham Perruk Kontaen