பாடல் #3463
பொல்லாத காலம் இது பொல்லாத
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
பொல்லாத காலம் இது பொல்லாத காலம் புவிவாழ்வு மனிதனின் - நிலைஇல்லா வாழ்வென புரியாத மனிதனோ அறியாமல் வாழகிறான் வேஷமாகவே மனிதன் திரிகிறான் - அவன் விருதாவாகவே சஞ்சலப்படுகிறான் ஆஸ்தியை அவனியில் மலை போல சேர்க்கிறான் ஆனாலும் யார் அதை வாரிக் கொள்வார் என்றறியான் உலகம் முழுவதையும் நீ ஆதாய மாக்கினாலும் உந்தன் ஆத்துமாவை நீ நஷ்டப் படுத்தினாலோ இலாபம் ஒன்றும் உனக்கில்லையே (3) மண்ணிலிருந்து தான் வந்தவன் - இதை மறந்து போகிறான் இந்த மனிதனே ஆவியோ தன்னைத் தந்த தேவனிடம் செல்லும் - இந்த உடல் தான் வந்த மண்ணுக்கே திரும்பும் ஒன்றுக்கும் உதவாதவீண் சரீரத்தை அலங்கரிக்கிறான் விலை மதிப்பில்லாத ஆத்துமாவை கெடுத்துக் கொண்டு பாவத்தை தண்ணீர் போல குடிக்கிறான் - தன் ஆத்துமாவை நரகத்திலே சேர்க்கிறான் பாவத்தின் சம்பளம் மரணமே - தேவன் இயேசுவின் கிருபை நித்தியவனே வா! வா! ஓடிவா! இயேசுவிடம் ஓடிவா ஆத்மநேசர் இயேசு உன்னை அழைக்கிறார் - உன் பாவம் போக்கவே உன்னை அழைக்கிறார் வாழ்கின்ற நாட்களிலே தேவன் இயேசுவை தேடி ஓடிவா மனிதா உன்னை மீட்க - அவர் சிலுவையில் மரித்தார் மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார்