பாடல் #3458
பொன்னகர்ப் பயணம்
🔤 Ponnakarp Payanam
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே, - மகிமை என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே. 1.உன்னத சுதனுக் கேதும் ஒப்புமையுண்டோ? - அவர் தன்னுதிரந் தந்து கொண்ட தன்மையருமை. - பொன் 2.லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே; - அவர் நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. - பொன் 3.வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர் - இன்று வந்தழைத்துப் போகுமேன்மைமாந்தருக் குண்டோ? - பொன் 4.மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும், - யேசு, தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே. - பொன் 5.கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில் - சென்றோர் நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார். - பொன் 6.ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு - புதுப் பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார். - பொன் 7.கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கிய ரென்று - சொல்லும் உத்தம வேதத்தின் உண்மை உன்னத மல்லோ? - பொன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ponnakarp Payanam Pokum Punniyarkalae, - Makimai Ennaven Ruraikka Vallor Yaarumillaiyae. 1.unnatha Sudhanuk Kaethum Oppumaiyunto? - Avar Thannuthiran Thanthu Konda Thanmaiyarumai. - Pon 2.laasaruk Kazhudha Kanneer Nammutaiyathae; - Avar Naesamaarpil Saaynthu Kollum Nitthiraiyithae. - Pon 3.vandhazhaitthup Poyennotu Vaippae Nendravar - Inru Vandhazhaitthup Pokumaenmaimaandharuk Kunto? - Pon 4.manninaa Luntaana Vudal Mannaeyaayinum, - Yaesu, Thannuru Votae Ezhumpum Satthiyam Ithae. - Pon 5.kanneer Thutaitthemmai Yaarrum Kartthararukil - Senror Nanniyae Jeevakani Yun Tinnal Neengkuvaar. - Pon 6.aattukkuttiyaanavar Singkaasanang Kantu - Puthup Paattukkal Paatum Sutthar Koottamatainthaar. - Pon 7.karttharuk Kullae Marippor Paakkiya Renru - Sollum Utthama Vaedhatthin Unmai Unnatha Mallo? - Pon