பாடல் #3454
பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
பொக்கிஷம் சேர்த்திடுங்கள் - பரத்திலே பொக்கிஷம் சேர்த்திடுங்கள். பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம் மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம் 1. பொட்டுமரிக்காதே - அங்கே புழுப் பூச்சி கெடுக்காதே துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே துருவும் பிடியாது குறையாது அழியாது 2. விண்ணுலகந் தன்னிலே பொக்கிஷத்தை விரும்பியே சேர்த்திடுவோர் மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே மாயப்ரஞ்சத்தின் வாழ்வெல்லாம் குப்பையே 3. உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் யிருக்கும் இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே அங்கே வைக்கப் பாரும் உங்கள் பொக்கிஷத்தை 4. ஜீவன் சுகத்துடனே இருக்கையில் ஆவலாய் இப்பொழுதே தேவ லோகத்திலே ஜீவப் பொக்கிஷத்தைச் சேர்த்திடுவோர் மெத்தப் பாக்கியவான்களே