பாடல் #3453
பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
🎙 கிறிஸ்தவ பாடல்
பேர் சொல்லி அழைத்த உன் தேவன் அவர் உண்மை உள்ளவர் உன் தலையை உயர்த்துவார் உன்னை மேன்மைப்படுத்துவார் – 2 மலைகள் எல்லாம் உன் வழிகளாகும் உந்தன் பாதைகள் உயர்த்தப்படும் வாலாக்காமல் உன்னை தலையாக்குவார் கீழாக்காமல் உன்னை மேலாக்குவார் கர்த்தரே உந்தன் மேய்ப்பராவார் உந்தன் கண்ணீரை துடைத்திடுவார் புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் நீதியின் வலக்கரத்தாலே உன்னை நித்தமும் தாங்கிடுவார் தாயைப்போல உன்னை தேற்றிடுவார் தாபரமாய் உன்னை அணைத்திடுவார்