பாடல் #3451
பேரின்ப நித்ய வீடங்கே
🎙 கிறிஸ்தவ பாடல்
1. பேரின்ப நித்ய வீடங்கே மாறுதல் துன்பமே இல்லை பேர் ஆசீர் இன்பம் மேல் வீட்டில் ஆனந்தம் இளைப்பாறுவோம். காத்து ..... மனத் தாழ்மையோடிரு ஜெபி ..... பொறுமையோடு நம்பி காத்து ..... ஜெபி காத்து நம்பியிரு. 2. சிலுவை பாடுகள் பட பாரில் தேவன் சித்தம் கொண்டார் இன்ப வீடு சேர நாடு மனத் தாழ்மையாய்க் காத்திரு. 3. போகும் பாதையில் முள் கண்டால் துயர் துக்கம் நெஞ்சில் கொண்டால் தூயர் நெஞ்சின் துயர் நினை இன்ப வீடு நாடித் தேடு. 4. வேலை கடினம் என்றாலும் ஜெபி பேர் மூச்சு மறவார் இளைப்பாறும் நாள் விடியும் மகிழ்ந்தங் கிளைப்பாறுவோம்.