பாடல் #3450
பேராற்றுக் கொப்பாகப் பேரின்பமுண்டாம்
🔤 Paeraarruk Koppaagap Paerinbamuntaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பேராற்றுக் கொப்பாகப் பேரின்பமுண்டாம் சகலத்தின் மேலும் ஜெயங்கொள்ளுமாம் நிறைந்து எந்நாளும் வற்றிப் போகாதாம் நிறைந்து எந்நாளும் ஆழ்ந்திருக்குமாம். யேகோவாவின் பேரில் சிந்தை வைத்தவன் பூரண சந்தோஷம் அடைந்தேறுவான். 2. ஜீவ ஊற்றினின்று நதி பாயுதே ஜீவ ப்ராணி யாவும் பிழைக்கும் என்றே போகுமிடம் எங்கும் செழிப்பாகுமாம் பானம் பண்ணும் யாவும் தாகந் தீருமாம். 3. யேசுவே! உம்மண்டை வந்தடைகிறேன் வாக்குத்தத்தம் என்னில் நிறைவேற்றுமே என் உள்ளத்தினின்று நதி ஓடவே ஆவியாலே இன்று ரூடவ்வைத் தாருமே. 4. யேசு உள்ளம் கையில் மறைக்கப்பட்டேன் அங்கே பகையாளி அலட்டக் காணேன் கவலை சற்றேனும் பின் தொடராதாம் சஞ்சலத்தின் மேகம் நிழலிடாதாம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paeraarruk Koppaagap Paerinbamuntaam Sakalatthin Maelum Jeyangkollumaam Nirainthu Ennaalum Varrip Pokaathaam Nirainthu Ennaalum Aazhnthirukkumaam. Yaekovaavin Paeril Sinthai Vaitthavan Poorana Santhosham Atainthaeruvaan. 2. Jeeva Oorrininru Nathi Paayuthae Jeeva Praani Yaavum Pizhaikkum Enrae Pokumidam Engkum Sezhippaakumaam Paanam Pannum Yaavum Thaagan Theerumaam. 3. Yaesuvae! Ummantai Vandhataikiraen Vaakkutthattham Ennil Niraivaerrumae En Ullatthininru Nathi Odavae Aaviyaalae Inru Roodavvaith Thaarumae. 4. Yaesu Ullam Kaiyil Maraikkappattaen Angkae Pakaiyaali Alattak Kaanaen Kavalai Sarraenum Pin Thodaraathaam Sanjjalatthin Maegam Nizhalitaathaam.