பாடல் #3448
பேரன்பர் இயேசு நிற்கிறார்
🔤 Paeranbar Yesu Nirkiraar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேரன்பர் இயேசு நிற்கிறார் மகா வைத்தியனாக கடாட்சமாகப் பார்க்கிறார் நல் நாமம் போற்றுவோமே விண்ணில் மேன்மை பெற்றதே மண்ணோர்க் கின்பமாகவே பாடிப்போற்றும் நாமமே இயேசு என்னும் நாமம் உன் பாவம் யாவும் மன்னிப்பேன் அஞ்சாதே என்கிறாரே; சந்தேகங் கொண்டு சோர்வதேன்? மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில் உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே மேன்மை உண்டாவதாக! நேசிக்கிறேன் இயேசு நாமம் நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் குற்றம் பயம் நீக்கும் நாமம் வேறில்லை இயேசுவே தான்! என் ஆத்மா பூரிப்படையும் அந்நாமம் கேட்கும்போது – விண்ணில் மா மேன்மை யேசு ஸ்வாமிக்கே நம்மால் உண்டாவதாக; ரட்சண்ய க்ரியைக்காகவே நாம் வாழ்த்தல் செய்வோமாக. ரட்சண்ய வல்ல நாமத்தால் விசாரம் நீங்கிப் போகும்; அவ்வின்ப நாமம் கேட்பதால் சந்தோஷமும் உண்டாகும். பேரின்ப மோட்ச லோகத்தில் மாண்பாகக் கூடுவோமே; ரட்சண்ய நாதர் பாதத்தில் சாஷ்டாங்கம் பண்ணுவோமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paeranbar Yesu Nirkiraar Makaa Vaitthiyanaaga Kataatsamaagap Paarkkiraar Nal Naamam Porruvomae Vinnil Maenmai Pertrathae Mannork Kinbamaagavae Paatipporrum Naamamae Yesu Ennum Naamam Un Paavam Yaavum Mannippaen Anjsaathae Enkiraarae; Santhaegang Kontu Sorvathaen? Meyp Paakkiyam Eekiraarae – Vinnil Uyirttha Aattukkuttikkae Maenmai Untaavathaaga! Naesikkiraen Yesu Naamam Nampituvaen Enrenrum – Vinnil Kurtram Payam Neekkum Naamam Vaerillai Yesuvae Thaan! En Aathmaa Poorippataiyum Annaamam Kaetkumpothu – Vinnil Maa Maenmai Yaesu Svaamikkae Nammaal Untaavathaaga; Ratsanya Kriyaikkaagavae Naam Vaazhtthal Seyvomaaga. Ratsanya Valla Naamatthaal Visaaram Neengkip Pokum; Avvinba Naamam Kaetpathaal Santhoshamum Untaakum. Paerinba Motsa Logatthil Maanpaagak Kootuvomae; Ratsanya Naadhar Paadhatthil Saashtaanggam Pannuvomae.