பாடல் #3445
பேசுகின்ற அன்பின் தெய்வம்
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
பேசுகின்ற அன்பின் தெய்வம் இயேசு - 2 அவர் திரு மொழிகளுக்கு செவி கொடுப்போமே - 2 அவர் அன்பிற்குள்ளே நிலைத்து நாமும் அக மகிழ்வோமே 2 அல்லேலூயா ...4 அல்லேலூயா இயேசுவுக்குள் வாழ்வை கட்டுவோம் - 2 நல்ல பங்கை தெரிந்த கொண்ட மரியாளை போல் நாமும் இன்று இயேசுவையே தெரிந்து கொள்வோமே அவரே வாழ்வு அவரே வழியும் அவரே உண்மையும் அன்புமானவர் பாரதத்தின் மக்களெல்லாம் மீட்பை காண - நாம் வாழ்வுதனை இயேசுவுக்கே அர்ப்பணிப்போமே சத்தியம் சொல்லுவோம் சாட்சியாய் வாழுவோம் இயேசுவே உலகின் மீட்பர் என்று முழங்குவோம் அல்லேலூயா