பாடல் #34422
விளக்கை கொளுத்தி
🔤 Vilakkai Kolutthi
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விளக்கை கொளுத்தி வீட்டை பெருக்கி தேடிடுவேன் காணாமல் போன வெள்ளிக்காசை தேடிடுவேன் விடிவெள்ளியே! நட்சத்திரமே! என் அருமை இயேசுவே நீரே எந்தன் தேவை என்று தேடிடுவேன் கண்டுபிடிக்கும் வரை ஜாக்கிரதையாய் நான் தேடிடுவேன் 1.அன்பே எந்தன் வாழ்விலில்லை அது இல்லையென்றால் பரலோகமில்லை அன்பே எந்தன் இயேசுவே பரிசுத்த ஆவியானவரே நீரே என்னை நிரப்பிட வேண்டும் கெஞ்சுகிறேன் 2.விசுவாசிக்க பெலனில்லை அதைவிட்டால் வேறுவழியில்லை விசுவாசத்தை துவக்கினவர் விசுவாசத்தை முடிக்கிறவர் விசுவாசத்தை வர்த்திக்கவேண்டும் கெஞ்சுகிறேன் 3.உண்மையை எங்கோ நான் தொலைத்தேனையா ஞானமும் நீதியும் இல்லையையா உண்மையும் நீதியும் உள்ளவரே ஞானமும் மீட்புமானவரே பாவங்களை எல்லாம் மன்னித்தருள கெஞ்சுகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vilakkai Kolutthi Veettai Perukki Thaetituvaen Kaanaamal Pona Vellikkaasai Thaetituvaen Vitivelliyae! Natsatthiramae! En Arumai Yesuvae Neerae Endhan Thaevai Enru Thaetituvaen Kantupitikkum Varai Jaakkirathaiyaay Naan Thaetituvaen 1.anpae Endhan Vaazhvilillai Athu Illaiyenraal Paralogamillai Anpae Endhan Yesuvae Parisuttha Aaviyaanavarae Neerae Ennai Nirappida Vaentum Kenjsukiraen 2.visuvaasikka Pelanillai Athaivittaal Vaeruvazhiyillai Visuvaasatthai Thuvakkinavar Visuvaasatthai Mutikkiravar Visuvaasatthai Vartthikkavaentum Kenjsukiraen 3.unmaiyai Engko Naan Tholaitthaenaiyaa Njaanamum Neethiyum Illaiyaiyaa Unmaiyum Neethiyum Ullavarae Njaanamum Meetpumaanavarae Paavanggalai Ellaam Mannittharula Kenjsukiraen