பாடல் #34412
யாக்கோபின் தேவனே
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
யாக்கோபின் தேவனே எந்தன் நம்பிக்கையே உம் நாமம் பாடுவேன் எந்நாளும் உயர்த்துவேன் அல்லேலூயா ...ஓசன்னா - 2 1.ஒரு மேய்ப்பன் மந்தையை காக்கும் வண்ணமாய் அவர் என்னை காத்திடுவார் ஒரு ஆயன் தோளிலே சுமப்பது போல சுமந்தென்னைத் தேற்றிடுவார் -அல்லேலூயா 2.அநாதி சிநேகத்தால் என்னை சிநேகித்தார் ஆதலால் பாடுவேன் காருண்ய இரக்கத்தால் என்னை சேர்த்தார் ஆதலால் பாடுவேன் 3.அவர் என் துக்கத்தை சந்தோஷமாக மாற்றினார் பாடுவேன் சஞ்சலம் நீங்க சந்தோஷம் தந்தார் ஆதலால் பாடுவேன் 4. உலர்ந்து போன எலும்புகளை நான் உயிர்பெற செய்திடுவேன் அதில் ஆவியை அனுப்பிடுவேன் பெரும் சேனையாய் எழுப்பிடுவேன்