பாடல் #34402
மகளே உன் இதயத்தை
🔤 Makalae Un Idhayatthai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகளே உன் இதயத்தை தா -என் மகனே உன் இதயத்தை தா அதில் நான் வந்து தங்கிட உன்னை நடத்தி சென்றிட மகளே(மகனே) உன் இதயத்தை தா -என் 1.மாய உலகத்தை பார்த்திட்ட உன் வாழ்வில் மாறா அன்பு நானே என்று அழைக்கின்றேன் வாலிப நாட்களிலே என்னிடம் வந்திடு வாழ்வை வளமாக்கி தந்திடுவேன் நம்பிடு இயேசு என்று கூப்பிடும் உந்தன் குறைகளை நீக்கிடுவேன் குற்றம் யாவும் நீக்கி உன்னை தூய்மை படுத்திடுவேன் சஞ்சலம் யாவும் நீக்கி உன்னில் சந்தோஷம் தந்திடுவேன் சார்ந்து வாழும் உன்னை இன்று உயர்த்தியே காட்டுவேன் - என்னை (மகளே ) 2.நொறுங்கிப்போன உந்தன் வாழ்க்கை நடுவினிலே நல்ல நேசராக நான் வந்து தங்கிடுவேன் சோர்ந்து போகாமல் தினம் உன்னை நடத்துவேன் சோதனைகள் சகித்திட பெலன் உனக்கு தந்திடுவேன் இயேசு என்று கூப்பிடும் உந்தன் வேதனை நீக்கிடுவேன் ஆபத்து நேரம் உனக்காய் நானே எழுந்து நின்றிடுவேன் சத்துரு யாவும் நீக்கி உனக்கு வெற்றி தந்திடுவேன் சாட்சியாய் நீயும் வாழ்ந்திட உனக்கு உதவி செய்திடுவேன் (மகளே )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makalae Un Idhayatthai Thaa -en Makanae Un Idhayatthai Thaa Athil Naan Vanthu Thangkida Unnai Natatthi Senrida Makalae(makanae) Un Idhayatthai Thaa -en 1.maaya Ulakatthai Paartthitta Un Vaazhvil Maaraa Anpu Naanae Enru Azhaikkinraen Vaaliba Naatkalilae Ennidam Vanthitu Vaazhvai Valamaakki Thanthituvaen Nampitu Yesu Enru Kooppitum Undhan Kuraigalai Neekkituvaen Kurtram Yaavum Neekki Unnai Thooymai Patutthituvaen Sanjjalam Yaavum Neekki Unnil Santhosham Thanthituvaen Saarnthu Vaazhum Unnai Inru Uyartthiyae Kaattuvaen - Ennai (makalae ) 2.norungkippona Undhan Vaazhkkai Natuvinilae Nalla Naesaraaga Naan Vanthu Thangkituvaen Sornthu Pokaamal Thinam Unnai Natatthuvaen Sodhanaigal Sakitthida Pelan Unakku Thanthituvaen Yesu Enru Kooppitum Undhan Vaedhanai Neekkituvaen Aabatthu Naeram Unakkaay Naanae Ezhunthu Ninrituvaen Satthuru Yaavum Neekki Unakku Verri Thanthituvaen Saatsiyaay Neeyum Vaazhnthida Unakku Udhavi Seythituvaen (makalae )