பாடல் #34390
பயப்படாதே நான்
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
பயப்படாதே நான் இருக்கிறேன் அழாதே நான் பார்த்துகொள்வேன் என்ற என் இயேசுவே என்ன நான் சொல்லுவேன் வார்த்தையை அனுப்பி விடுதலை தந்தீரே எந்தன் இயேசுவே நன்றி நான் சொல்லுவேன் நன்மைகளால் என்னை திருப்தியாக்கினீரே 1.தன்னந்தனியாக நான் தவித்திட்ட வேளையில் துணையுமானீரே துருகமானீரே நன்றி ஐயா … . நன்றி ஐயா …. (2) 2.வழியறியாது நான் திகைத்திட்ட நேரத்தில் வழியுமானீரே வாழ்வுமானீரே நன்றி ஐயா … . நன்றி ஐயா …. (2) 3.வியாதிப்படுக்கையில் வேதனை நேரத்தில் ஜீவனுமானீரே பெலனுமானீரே நன்றி ஐயா … . நன்றி ஐயா …. (2)