பாடல் #34376
நான் வாழ்வதால்
🔤 Naan Vaazhvathaal
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் வாழ்வதால் உன்னையும் வாழ வைப்பேன் என்னை தேடினால் உன்னை நான் வாழ வைப்பேன் -2 மரித்தேன் ஆனாலும் உயிரோடு இருக்கிறேன் இன்றும் உயிரோடு வாழ்கிறேன் , இன்றும் உனக்காக வாழ்கிறேன் 1. தனிமை தோல்வியினால் மனமுடைந்து போனாயோ தற்கொலை முடிவு என்று அதை செய்ய துணிந்தாயோ நீ வாழத்தான் நான் மரித்தேன் நீ ஏன் சாக வேண்டும் என்னிடம் வா வாழ வைப்பேன் 2.வறுமை தோல்வியினால் வழியின்றி தவிக்கின்றாயோ வியாதி வேதனையால் படுக்கையில் துடிக்கின்றாயோ உன் பாடுகள் ஏற்று கொண்டேன் நீ ஏன் கலங்க வேண்டும் 3.செய்த பாவம் உன்னை தினம் தினம் தொடர்கின்றதோ கொடிய சாபம் உன்னை துரத்தியே வருகின்றதோ உனக்காகத்தான் இரத்தம் சிந்தினேன் நீ ஏன் சுமக்க வேண்டும் (நீ ) ஓடி வா வாழ வைப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vaazhvathaal Unnaiyum Vaazha Vaippaen Ennai Thaetinaal Unnai Naan Vaazha Vaippaen -2 Maritthaen Aanaalum Uyirotu Irukkiraen Inrum Uyirotu Vaazhkiraen , Inrum Unakkaaga Vaazhkiraen 1. Thanimai Tholviyinaal Manamutainthu Ponaayo Tharkolai Mutivu Enru Athai Seyya Thuninthaayo Nee Vaazhatthaan Naan Maritthaen Nee Aen Saaga Vaentum Ennidam Vaa Vaazha Vaippaen 2.varumai Tholviyinaal Vazhiyinri Thavikkinraayo Viyaathi Vaedhanaiyaal Patukkaiyil Thutikkinraayo Un Paatugal Aerru Kontaen Nee Aen Kalangga Vaentum 3.seytha Paavam Unnai Thinam Thinam Thodarkindratho Kotiya Saabam Unnai Thuratthiyae Varukindratho Unakkaagatthaan Rattham Sinthinaen Nee Aen Sumakka Vaentum (nee ) Oti Vaa Vaazha Vaippaen